ஓரழகு! தனியழகு!!
சூர்யப் பிளம்பு மறைகையிலும்
சுகமான ஓர் இயற்கை...!
அழகிய மேகங்களின்
இடையிடையே
அந்தி வெயில்
சாய்ந்து கிடக்கின்ற போது…
அதையும் மீறி பேரழகு
இல்லையெனத் தோன்றும்..!
பகல் ஒளியைப்
பறித்துக் கொண்டு மேற்கில்
பகலவனும் மறைகையிலே
ஓரழகு...!
எண்ணாத கோணங்களில்
எண்ணி வைத்த நட்சத்திரங்கள்
எட்டியெட்டிப் பார்க்கையிலே
ஓரழகு...!
ஓன்றையொன்று
முந்திக்கொண்டு
ஓடும் முகில் கூட்டங்களும்
ஓரழகு...!
ஓரிடத்தில் நில்லாமல்
மெல்ல மெல்ல
நகர்ந்து செல்லும்
ஒற்றை நிலா தனியழகு…!!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.