ரமழான் வந்ததே…!
இரு விழி சிந்திட
இருகரம் ஏந்திடு…
இருதயம் உள்ளே
இறையொளி கொடுப்பான்...
ரமழான் அதற்காய்
வரமாய்க் கிடைத்ததே
இறiவா இதற்காய்
சிரம் நான் பணிகின்றேன்…
யா அல்லாஹ்!
கரைகள் இல்லா
உன் அன்பில்
கரைந்திடும் - எம்
பாவக்கறைகள்
குறைவே இல்லா
உன் அருளால்
குறைந்திடும் - எம்
சோகச்சுமைகள்
இருளில் கூட
ஒளிரும்
உன் திருமறை
எங்கும் எங்கும்…!
இரவும் நீ தந்தாய்
பகலும் நீ தந்தாய்
வானில் சுடர் நீ தந்தாய்
வாழ நீர் தந்தாய்
உண்மை பார்க்கத்தான்
இமைக்கும் விழிதந்தாய்
நன்மை ஆற்றத் தான்
ரமழான் நீ தந்தாய்!
இதயம் தன்னில் உள்ள
எண்ணம் நீ அறிவாய்…
உள்ளம் ஒன்று சொல்லும்
உதடு வேறு பேசும்
கயவர் நீ அறிவாய்…
எல்லோரும் ஒன்று கூடும்
மறுமை மஹ்ஷர் தன்னில்
பகலோன் வெப்பம் நீங்க
நிழலாய் உந்தன் “அர்ஷை”
ரமழான் தன்னில் கேட்டு
பணிந்தோம் சிரமே தாழ்த்தி..!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.