ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் எனும் ஊரைச் சேர்ந்த ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், கூராங்கோட்டையிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். எம்.ஏ., மற்றும் பி.எட்., பட்டங்களைப் பெற்றுள்ள இவர் கதை, கவிதை, கட்டுரை, பேட்டி, துணுக்கு, சிரிப்பு, விமர்சனம் என 2200க்கும் மேற்பட்ட படைப்புகளைப் பல்வேறு இதழ்களில் எழுதியிருக்கிறார். இவர் தனது வீட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறக்குறைய 2000 புத்தகங்களைக் கொண்ட வீட்டு நூலகம் ஒன்றை அமைத்துள்ளார். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு நூல்களைக் கொடுத்து உதவி, அவர்களைப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து வருகிறார்.
தனது ஆசிரியப் பணியுடன், பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வரும் இவர், மதுரை தினமலர் வழங்கிய “லட்சிய ஆசிரியர்-2014 விருது”, சென்னை, எழில் இலக்கியப் பேரவை வழங்கிய “குறள் உரை செம்மல் விருது”, காரைக்குடி, வள்ளுவர் பேரவை வழங்கிய “குறள் ஆர்வலர் விருது”, காஞ்சி முத்தமிழ் சங்கம் வழங்கிய “முகநூல் வேந்தர் விருது”, தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் வழங்கிய “ஆசிரிய செம்மல் விருது” போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆசிரியப் பணிக்கு வழங்கப்படும் மத்திய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதினைப் பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஆசிரியப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
கதை - சிறுகதை
கவிதை
சிறுவர்பகுதி - கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.