கி. ஜெயந்தி
சாகித்திய அகாதெமி - தென் மண்டல அலுவலகம் பெங்களூருவில் பணியாற்றும் இவர், “கிரவுஞ்ச பட்சிகள்” என்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற கன்னடக் கதைத் தொகுப்பை, சாகித்திய அகாதெமிக்காக தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். திரு. சுக்கூர் பெடையங்கோடு படைத்த மலையாளக் கவிதை நூலை “ஆழங்களில் ஜீவிதம்” என்று தமிழில் மொழியாக்கம் செய்து, அது சாந்தி நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பேலூர் ரகுநந்தன் அவர்களின் ‘ரத்தவர்ணே’ என்ற கன்னட நாடகம் தமிழில் “குருதி நிறத்தாளே” என்று மொழிபெயர்க்கப்பட்டு ஜெய்ரிகி பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலத்திலிருந்தும் கவிதைகள், கதைகள், நாவல், நாடகங்கள் என மொழியாக்கம் செய்துள்ளார். திசை எட்டும், கிழக்கு வாசல், புதுகைத் தென்றல், கவிஓவியா மற்றும் கனவு போன்ற இதழ்களில் மொழிபெயர்ப்புகள் மற்றும் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.
*****
கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.