முகில் தினகரன்
முகில் தினகரன் இந்திய அரசு சார்பு நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வருபவர். தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களில் 20 நாவல்கள், 300 சிறுகதைகள்,40 கட்டுரைகள், 60 கவிதைகள் என இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. தினமலர் -வாரமலர், தினகரன், இதயம் பேசுகிறது போன்ற இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியிலும், இலக்கிய அமைப்புகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிகளைப் பெற்றிருக்கிறார்.
வசந்தவாசல், உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை, நூலக வாசகர் வட்டம் மற்றும் குறள் அரசுக் கழகம் போன்றவற்றில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.
இவருக்கு தில்லி தமிழ்ச் சங்கம், ”தமிழ்ச் சிற்பி” விருதையும், கோவை வானொலி நேயர் பேரவை, ”கவிக்கோ” விருதையும், தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பு, “கொங்குத் தமிழ்க் கவிமணி” விருதையும், உலகத்தமிழ்க் கலை மன்றம், “சிறுகதைச் சுரபி” விருதையும், சோலை பதிப்பகம், “சிறுகதைச் செம்மல்” விருதையும், தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, “பைந்தமிழ்ப் பாவலர்” விருதையும், சோலை பதிப்பகம், “தமிழ் வள்ளல்” விருதையும், உலகத்தமிழ்க் கலை மன்றம், “சிறுகதை மாமணி” விருதையும், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், “புலவர் சு. ரா. நினைவு” விருதையும், “பாவேந்தர் பாரதிதாசன் நினைவு ” விருதையும், வண்ணப்பூங்கா மாத இதழ் “வண்ணப்பூங்கா” விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
கதை - சிறுகதை
கட்டுரை - பொது
கட்டுரை - இலக்கியம்
கவிதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.