பாளை சுசி எனும் பெயரில் பல அச்சிதழ்களில் எழுதி வரும் பேராசிரியர் எ.சிட்னி சுதந்திரன் தாவரவியலில் எம்.எஸ்.சி., எம்.ஃபில் பட்டங்களைப் பெற்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தாவரவியல்துறைப் பேராசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஓய்வு பெற்ற மருத்துவர். இவரது இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்து சென்னையில் இருக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டில் இலக்கிய ஆர்வம் மேலிட கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என எழுதத் துவங்கிய இவரது படைப்புகள் தமிழ்நாட்டின் பல முன்னனி அச்சிதழ்களிலும், கல்லூரி மலர்களிலும் வெளியாகி இருக்கின்றன. ஓவியம் வரைதல், கித்தார் வாசித்தல், ஹாக்கி, டென்னிஸ் விளையாட்டுக்கள் போன்றவற்றிலும் ஆர்வமுடையவர். இவற்றிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.