முனைவர் நா. சுலோசனா
சிவகாசியைச் சொந்த ஊராகக் கொண்டவரும், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் மொழி (ம) மொழியியல் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவருமான இவர் இதற்கு முன்பாக, கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி, எஸ். எஸ். டி. எம். கல்லூரி, சிவகாசி அய்ய நாடார் சானகி அம்மாள் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். நான்கு நூல்களை எழுதியிருக்கும் இவர், நான்கு அறக்கட்டளைகளின் பொறுப்பாளராக இருந்து, அதன் வழியாக பன்னிரண்டு நூல்களைப் பதிப்பித்துமிருக்கிறார். நான்கு பன்னாட்டுக் கருத்தரங்கங்களையும், ஒரு தேசியக் கருத்தரங்கையும் நடத்தியிருக்கும் இவர் 65க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். சில அச்சிதழ்களிலும் தனது எண்ணங்களை எழுத்தாக்கி வருகிறார். இவரது நெறியாளுகையின் கீழ் 15 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். மேலும் 3 பேர் ஆய்வியல் நிறைஞர் ஆய்வையும், 8 பேர் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டுவருகின்றனர்.
கதை - சிறுகதை
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கட்டுரை - இலக்கியம்
கட்டுரை - சமூகம்
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.