குறுந்தொடர் கதை
ஒரு இனிய கானம்

மூலக்கதை:
FELICIA MASON (பெலிசியா மேசன்)
தமிழாக்கம்:
இஷாரா
12. உன்னை விரும்புகிறேன்.

சிறிது நேரம் மக்களோடு கலந்திருந்துவிட்டு
விஷ்ணுவும் ஜோதியும் அங்கிருந்து நழுவினார்கள்.
"எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது,"
என்று அவளிடம் கூறினான். "நீயும் வருகிறாயா?"
எந்த ஒரு விஷயத்திலும் அவன் காட்டும் பற்றுதலை அதிசயத்தபடி, "சரி" என்று
சொன்னாள்.
"அங்கே நீங்கள் கூறியது உண்மைதானா?" என
வினவியவள், ஒருவேளை எதைப் பற்றி என அவனுக்கு விளங்காதோ என்றெண்ணி "அதாவது
நம்மைப் பற்றி?" என்று சேர்த்துக் கொண்டாள்.
அவன் அவளுடையக் கைகளை தன் கரத்தில் எடுத்து, "உண்மையில்லாததை நான் எப்போது
கூறுவதில்லை." என்று கூறி அவளது கைகளில் முத்தமிட்டான். ஜோதி அழகாகப்
புன்னகைத்தாள்.
சில விநாடிகள் கழித்து, அவன் காபி விடுதியின் பின்புறம் வண்டியை நிறுத்தியபோது
அவளுக்கு சில
சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தன. "காபி விடுதியிலா உங்களுக்கு முக்கியமான வேலை
இருக்கிறது?"
ஆம் என்று தலையசைத்தான். "ஞாபகம் இருக்கிறதா எனக்கு வேறு சில திறமைகளும்
இருப்பதாக கூறினேனே?"
"ஆம்." என்று ஒற்றைச் சொல்லில் தயக்கத்துடன் பதிலத்தாள்.
"அதில் ஒன்று இசை. நான் ஒரு இசைக் குழுவில் இருக்கிறேன். நாங்கள் வாரத்தில்
இருமுறை இங்கே வாசிப்போம். வா போகலாம்," என்றபடி அவளது கையைப் பற்றினான். "எங்கள்
சுற்று இன்னும் பத்து நிமிடத்தில் ஆரம்பித்துவிடும்."
விஷ்ணுவும் அவனது நண்பர்களும் வாசிப்பதை ஜோதி ரசித்துக் கொண்டிருந்த போது, இதயம்
சொன்ன வழி செல்வது பற்றி உஷா சித்தி கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது. அந்த இசைக்
குழு இடைவெளி விட்டபோது தனது செல் போனை எடுத்து சித்தியை கூப்பிட்டாள்.
"உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா அந்த முக்கியமான பதவி உயர்வைப் பற்றிச் சொன்னேனே?"
"நிச்சயமாக. இன்று காலை தான் சமூகக் கூடத்தின் தலைவி பாமாவிடம் உன்னைப் பற்றி
பொறுமையோடு சொல்லிக் கொண்டிருந்தேன். நீ எங்கே இருக்கிறாய்? ஏதோ விழா போல் இசை
சத்தம் கேட்கிறதே."
"நான் முக்கிய சாலையில் இருக்கும் காபி விடுதியில் இருக்கிறேன். நான் அந்த
வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை, சித்தி. சொல்லப் போனால் அதை ராஜினாமா செய்து
விட்டேன். எனது சொந்தத்
தொழிலை தொடங்கப் போகிறேன்."
கவலையை வெளிப்படுத்துவதற்கு பதில் உஷா சிரித்தான். "அட, இது இன்னும் நல்ல
செய்தியாயிற்றே."
ஜோதி தலையசைத்தாள். "நான் சொன்னது விளங்கியதா சித்தி? என் வேலையை விட்டு விட்டேன்.
நல்ல சம்பளத்தில் எனக்கு பாதுகாப்பு கவசமாய் இருந்த வேலை."
"நான் எப்போதும் உனக்காக வேண்டிக் கொள்வதெல்லாம் உனது லட்சியத்தை அடைய போதுமான
நம்பிக்கையும், தைரியமும் உனக்கு கிடைக்க வேண்டுமென்றே. நடப்பதை பார்த்தால் அவை
உன்னை அடைந்து விட்டன போலும்."
உஷா சித்தி சொல்வது சரிதான் என ஜோதி நினைத்தாள். அவளது வாழ்க்கையின் எல்லாத்
தரத்திலும்
தனது இதயத்தின் சொல்ப்படியே நடக்கிறாள்.
விஷ்ணுவும் அவனது நண்பர்களும் அடுத்த சுற்றுக்கு அமரவும், ஜோதி அந்த இனிய
கானத்தை ரசித்தப்படி இனி வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தாலும், வாழ்வு ஒரு
இனிய சாகசமாகவே இருக்கும் என்று நம்பினாள்.
முற்றும்.

பகுதி-11
|