........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-64

 தெரியாது...! முடியாது...!கிடையாது...!

  • உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

  • குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.

  • செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத் தெரியாது.

  • ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.

  • மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.

  • பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.

  • எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.

  • வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.

  • பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.

  • கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது கிடையாது.

  • சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.

  • இசைமேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு கிடையாது.

  • வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.

  • நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.

  • இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.

  • பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.

  • ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.

  • ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.

-தேனி.எஸ்.மாரியப்பன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

   முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.